skip to content

Seval Fight for Thelungu Business

சிலுப்பிக்கொண்ட சேவல்

சேவல் படத்தைத் தயாரித்த பிரபல விநியோகஸ்தர் ஜின்னா, அப்படத்தின் இயக்குனர் ஹரி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையில் 50 சதவீதம் ஹரிக்குத் தருவதாக ஒப்பந்தம் போட்டிருந்தார் ஜின்னா.

ரிலீசுக்கு முன்பு, இப்படத்தின் தெலுங்கு உரிமையை நாற்பது லட்சம் ருபாய்க்கு ஒருவர் கேட்பதாகவும், இருவரும் தலா 20 லட்சமாக பிரித்துக்கொள்ளலாம் என்று கூறினாராம் ஹரி.

ஆனால் ரிலீசுக்குப் பிறகு ஒரு கோடி வரை விலைபோகும். அவசரம் வேண்டாம் என்றாராம் ஜின்னா. பிறகு ஒருமனதாக ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள் இருவரும். படம் என்ன விலைக்குப் போனாலும் சரி. 60 லட்சம் என்று கணக்கிட்டு 30 லட்சத்தை ஜின்னா ஹரிக்குக் கொடுத்துவிட வேண்டும். இப்படி முடிவெடுக்கப்பட்டு 30 லட்சத்தையும் வாங்கிவிட்டார் ஹரி.

படம் ரிலீஸ் ஆகி படுதோல்வி அடைந்ததால் இப்படத்தின் தெலுங்கு உரிமையைப் பத்து லட்சத்திற்குக்கூடக் கேட்டு ஆள் வரவில்லை. அதனால் கொடுத்த 30 லட்சத்தைத் திருப்பி கேட்கிறார் ஜின்னா. கொடுப்பேனா என்று அடம் பிடிக்கிறார் ஹரி



http://www.tamiltranslator.com http://www.freeofree.com
http://www.dialogphones.com http://www.motorshowinfo.com
http://www.aishwarya-wedding.com http://www.achchi.com
http://www.carmakersites.com http://www.bbsnetting.com
http://www.shantravels.com http://www.lankasale.com

Rajinikath daughter wedding


Superstar Rajinikanth daughter Soundarya and Ashwin tied the knot on 02/09/2010.

Random Images

.
Rate View New Comment