skip to content

The big enthiran bought by sun pictures

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன்

சன் டிவியின் சன் பிக்சர்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பிரமாண்ட படைப்பான எந்திரன்- தி ரோபோ-வை ஐங்கரன் நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது
எந்திரன் படத்தை ஐங்கரன் நிறுவனம் ரூ. 150 கோடி பொருட் செலவில் தயாரிக்க திட்டமிட்டது. இதில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பெரு நாட்டில் இரு மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு துவங்கியது. கிட்டத்தட்ட 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அய்ங்கரன் நிறுவனமும், அதன் பங்குதாரரான ஈராஸ் இண்டர்நேஷனலும் நிதி நெருக்கடியில் சிக்கின. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, ஈராஸ் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது.

இந் நிலையில், இந்த மாபெரும் படத்தைத் தயாரிக்க முன் வந்தது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.  பெரும் தொகைக்கு படத்தை வாங்கியுள்ள சன் பிக்சர்ஸ், இந்தப் படத்தை இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக்க உறுதிபூண்டுள்ளது.

சன் நிறுவனம் சமீபத்தில் தான் சன் பிக்சர்ஸ் என்ற தனது திரைப்படப் பிரிவைத் துவங்கியது. இந்த நிறுவனத்தின் முதல் படம் காதலில் விழுந்தேன் பிரமாண்ட வெற்றி பெற்றது. அடுத்த படம் தெனாவட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது



http://www.tamiltranslator.com http://www.freeofree.com
http://www.dialogphones.com http://www.motorshowinfo.com
http://www.aishwarya-wedding.com http://www.achchi.com
http://www.carmakersites.com http://www.bbsnetting.com
http://www.shantravels.com http://www.lankasale.com

Rajinikath daughter wedding


Superstar Rajinikanth daughter Soundarya and Ashwin tied the knot on 02/09/2010.

Random Images

.
Rate View New Comment