skip to content

a temple for Nayanthara

நயனதாரா தனக்காக கோயில் எதுவும் வேண்டாம்
தனக்கு ரசிகர்கள் தரும் அன்பே போதும், தனக்காக கோயில் எதுவும் கட்ட வேண்டாம் என நடிகை நயனதாரா வேண்டுகோள்
ரசிகர்கள் எனக்கு கோவில் கட்டப் போவதாக சில ரசிகர்கள் கூறிவருகிறார்கள். கோவில் என்பது கடவுளுக்கு மட்டுமே கட்டக் கூடியது. சாதாரண மனிதர்களுக்கு கட்டுவது இல்லை.

தமிழ் ரசிகர்களின் ரசிப்புத் தன்மையின் உச்சகட்டம் நடிகைகளுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தும் கலாச்சாரம்.  ஏற்கெனவே நடிகை குஷ்புவுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே திருச்சிக்குப் பக்கத்தில் கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்தி, குஷ்பு சிலை வைத்து பாலாபிஷேகம் பூஜையெல்லாம் செய்து வந்தார்கள்.
குஷ்புவின் கவர்ச்சி ஆதிக்கம் குறைந்ததும், அதைவிட பலமடங்கு கவர்ச்சி ஆயுதங்களோடு வந்த நமீதாவிடம் தங்களை இழந்தனர். திருநெல்வேலிக்கு அருகே நமீதாவுக்கும் கோயில் கட்டி, ஓங்குதாங்கான அவரது சிலையொன்றை வைத்து வழிபட்டு வருகிறார்களாம்.

இப்போது நயன்தாரா முறை, அவருக்கும் ஒரு கோயிலைக் கட்டி, அவர் முன்னிலையிலேயே கும்பாஷேகம் நடத்துவோம் என சில ரசிகர்கள் அறிவித்திருந்தனர்.

அப்போதைக்கு அமைதியாக அதை அனுமதித்த நயன்தாரா, பின்னர் எழுந்த விமர்சனங்களைக் கண்டு, கோயில் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

என் ரசிகர்கள் என் மேல் அளவு கடந்த பிரியம் வைத்து உள்ளனர். அவர்களின் அன்பு எனக்கு போதுமானது. அந்த அன்புக்கு எப்போதும் நான் கட்டுப்படுவேன். எனவே எனக்கு கோவில்கட்ட வேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இந்த முயற்சியை ரசிகர்கள் கைவிட வேண்டும். பூஜை, வழிபாடுகள் எல்லாம் கடவுளுக்காக மட்டுமே நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.



http://www.tamiltranslator.com http://www.freeofree.com
http://www.dialogphones.com http://www.motorshowinfo.com
http://www.aishwarya-wedding.com http://www.achchi.com
http://www.carmakersites.com http://www.bbsnetting.com
http://www.shantravels.com http://www.lankasale.com

Rajinikath daughter wedding


Superstar Rajinikanth daughter Soundarya and Ashwin tied the knot on 02/09/2010.

Random Images

.
Rate View New Comment